dulquer salman about ajithkumar

தமிழ், மலையாள, தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மான், தமிழில் கடைசியாக ஹே சினாமிகா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்த கல்கி 2898 ஏ.டி. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடித்திருக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் துல்கர் சல்மான்.

Advertisment

அந்த வகையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், அஜித்தின் மங்காத்தா படம் போல் இதிலலும் பணம் சம்பந்தப்பட்ட காட்சி இருக்கிறது. அஜித்தை பின்தொடர்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “நான் அஜித்தின் ரசிகன். இயக்குநரும் கூட அஜித்தின் ரசிகர்தான். அஜித்தை வைத்து படம் பண்ணவேண்டும் என்பது அவருடைய பெரிய ஆசை. எல்லா படமும் ஒரு வாய்ப்புதான். அதில் என்னுடைய முழு பங்களிப்பை செலுத்துகிறேன். ஒருவரை தொடர வேண்டும் என பிளான் செய்யத் தெரியாது. அஜித்தை நான் நிறைய மதிக்கிறேன். அவர் மாதிரி வேறு யாரும் வர முடியாது” என்றார்.