Advertisment

இந்த கேள்விய என்கிட்ட கேக்காதீங்க - பயில்வானால் கடுப்பான துல்கர் சல்மான்

Dulquer salmaan upset bayilvan ranganathan question

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதா ராமம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனையொட்டி அண்மையில்இப்படத்தின் பத்திரிகையாளர்சந்திப்பு நடைபெற்றது. இதில் துல்கர் சல்மான் கலந்து கொண்டுநிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நடிகரும்சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், "படத்துலஉங்க பேரு ராம்ன்னுசொன்னிங்க, ஆனால் படத்திற்குராமம்என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துல்கர் சல்மான், "கதைக்கு ஏற்றவாறு இருந்ததால்அப்படி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d8b27a46-0f93-4dfc-a16e-89edca731cb6" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_11.jpg" />

இருப்பினும் தொடர்ந்து கேள்வி எழுப்பிய பயில்வான், அது ஒரே குழப்பமா இருக்கும், சீதா ராமனா? சீதா ராமம்மா?, இல்ல சீதா நாமம்மா?. அதனால எனக்கு ராமம் என்றால் என்ன அரத்தம்ன்னு தெரிஞ்சாகணும். ஒரு வேலை அது தெரியாமல் தான் இந்த படத்தில் நடித்தீர்களா" என்றார். இதனால் அப்செட்டான துல்கர், "நான் இதை எழுதவும் இல்ல, இந்த பெயரை நான் வைக்கவும் இல்ல. இதை சொல்றதுக்கு படத்தின் இயக்குநரும் கூட இல்ல. நான் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டப்போது இந்த படத்திற்கு பெயரே வைக்கவில்லை. சீதா ராமம் என்ற பெயர் ஒரே மாதத்திற்கு முன்புதான் வைத்தார்கள்" எனப் பதிலளித்தார்.

dulquer salman ranganathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe