/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1358.jpg)
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதா ராமம்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதனையொட்டி நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர்சந்திப்பு நடைபெற்றது. இதில் துல்கர் சல்மான் கலந்து கொண்டுநிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், சீதா ராமன் என்றால் கண்டிப்பாக அனுமன் இருப்பார். அந்த வகையில் சீதா ராமம் என்று பெயர் வைத்துள்ளீர்கள், அப்படியென்றால் இந்த படத்தில் அனுமன் யார் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா தான் இப்படத்தில் அனுமனாகஇருக்கலாம் என்று சிரித்தபடி பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)