Advertisment

துல்கர் சல்மான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா !

dulquer salmaan starring hey sinamika movie first look poster released

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் துல்கர் சல்மான், தமிழிலும்கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் கடைசியாக இயக்குநர்தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b7de8d09-0c3c-4158-8c6d-7ed9c8ef41b1" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/AVV-article-inside-ad_3.jpg" />

Advertisment

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகதமிழில் பிரபல நடன இயக்குநர்பிருந்தா மாஸ்டர் இயக்கும் 'ஹே சினாமிகா' என்ற படத்தில் நடித்துவருகிறார்.நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் முதன்முதலில் இப்படம் மூலம் இயக்குநராக சினிமா துறையில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில்துல்கர் சல்மானுடன் இணைந்து காஜல் அகர்வால் மற்றும் அதிதிராவ் ஹைதாரி நடித்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளைநிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில், ‘ஹே சினாமிகா’ படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரைசூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.அத்துடன் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

actor surya dulquer salman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe