அதர்வாவுக்கு ஜோடியாகும் மிர்னாலினி...

டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாலினி தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

mirnalini

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

டப்ஸ்மாஷ் செயலி மூலம் தமிழக இளைஞர்களிடையே பிரபலமான மிர்னாலினி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்கிறார். மேலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், தமிழில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் காத்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படம் தற்போது தெலுங்கில் வால்மிகி என்று ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்போது லக்‌ஷ்மி மேனன் காதாபாத்திரத்தில் நடிக்க மிர்னாலினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

adharva karthik subbaraj mirnalini sidharth varun tej
இதையும் படியுங்கள்
Subscribe