Advertisment

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரில் டப்பிங் ஸ்டூடியோ திறப்பு...

spb

'பாடு நிலா பாலு'எனஅன்போடு அழைக்கப்படும் அளவிற்கு, தனதுதேன்மதுரக் குரலால், ரசிகர்களின் மனதைக்கொள்ளைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஎஸ்.பி.பிகடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

Advertisment

எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடகராகமட்டுமில்லாமல், நடிகர், இசையமைப்பாளர்எனபல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பின்னணிக் குரல் அளிக்கும்டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்தஎஸ்.பி.பாலசுப்ரமணியம், 'சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ்' யூனியனில், டப்பிங் யூனியனின் உறுப்பினராகஇருந்தார். எஸ்.பி.பியின் மறைவைத் தொடர்ந்து, அவருக்குஅஞ்சலி செலுத்திய டப்பிங்யூனியன் தலைவர் ராதாரவி,எஸ்.பி.பியின் நினைவாக, டப்பிங் ஸ்டூடியோதிறக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இன்று,சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில், "எஸ்.பி.பி ஸ்டூடியோ" என்ற பெயரில், ஒரு டப்பிங் ஸ்டூடியோதிறக்கப்பட்டுள்ளது.செயற்குழு உறுப்பினர்களின் முன்னிலையில், டப்பிங்யூனியன் தலைவர்ராதாரவி, இந்த ஸ்டூடியோவினைதிறந்து வைத்துள்ளார். இது பற்றி, டப்பிங்யூனியன் உறுப்பினர்கள், திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த ஸ்டூடியோவினை தலைவர் திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக தெரிவித்தனர்.

SOUTH INDIAN DUBBED ARTIST spb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe