Skip to main content

கண் கலங்கிய ட்ரம்ஸ் சிவமணி! 

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
spb

 

 

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார்.

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. இன்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் எஸ்.பி.பி.யின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசை கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

அதில், “என் அன்பு அண்ணன், என் குரு, என் காட்ஃபாதர், டாக்டர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அண்ணன் நம்மளை எல்லாம் விட்டு போய்விட்டார். ஆனால், நம்பக்கூடதான் இருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அண்ணா, உங்களை நாங்கள் மிஸ் செய்வோம்” என்று அழுதபடியே வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்