Advertisment

'டிரைவிங் லைசன்ஸ்' படத்தின் ரீமேக் குறித்து வெளியான புதிய தகவல்!

Driving Licence

Advertisment

லால் ஜுனியர் இயக்கத்தில் பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் 'டிரைவிங் லைசென்ஸ்'. இப்படத்திற்கு கேரள ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமாரும், சுராரி வெஞ்சாரமூடு நடித்த கதாபாத்திரத்தில் எம்ரான் ஹஸ்மியும் நடிக்க உள்ளனர். இப்படத்தை இந்தியில் இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த தகவலும் தற்போதுவரை வெளியாகவில்லை. விரைவில் இப்படம் தொடர்பான முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

akshay kumar
இதையும் படியுங்கள்
Subscribe