
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’படத்தின் தமிழ் - தெலுங்கு மொழி ரீமேக் படத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக 'டிரைவர் ஜமுனா' என்ற படத்தில் நடிக்கிறார். 'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை, 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கி படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். சென்னையில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படப்பூஜை நடத்தி, படப்பிடிப்பை மும்முரமாக தொடங்கி நடத்தி வருகிறது படக்குழு. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம், கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.
Follow Us