Advertisment

மோகன் லால் நடிப்பில் உருவாகிறது 'திரிஷ்யம் 2'! அதிகாரபூர்வ அறிவிப்பு!

rjtyjf

Advertisment

லாலேட்டன் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இன்று தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இது ட்விட்டரில் இந்தியளவில் அவருடைய ரசிகர்களால் ட்ரெண்டாகி வரும் நிலையில் மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் 'திரிஷ்யம் 2' படத்தின் அறிவிப்பு வீடியோவை மோகன் லால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இவர்கள் கூட்டணியில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'திரிஷ்யம்' படம் மாபெரும் வெற்றி பெற்று மலையாள பட உலகில் பெரிய வசூலில் சாதனை படைத்தது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பல்வேறு சாதனைகள் படைத்தது. இப்படி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பு மோகன் லாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. 'திரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

mohan lal drishyam2
இதையும் படியுங்கள்
Subscribe