drishyam 2 telugu version release date announced

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்துஇயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியத்ரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியது.முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்றது.

Advertisment

இப்படத்தின் வெற்றியை பார்த்த மற்ற மொழி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மொழியில் த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்வதற்கானமுயற்சியில்இயங்கியுள்ளது. அந்த வகையில்தெலுங்கில்இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மீனா, நதியா, எஸ்தர் அனில் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் தெலுங்கு த்ரிஷியம்2 படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் 25 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாக நடிகர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.