Advertisment

‘த்ரிஷ்யம் 2’ ரீமேக்கை இயக்கும் ரஜினி பட இயக்குநர்!

p vasu

‘த்ரிஷ்யம் 2’ படத்தின் கன்னட ரீமேக்கை இயக்குநர் பி.வாசு இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்துதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் ‘த்ரிஷ்யம் 2’ உருவானது. கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

Advertisment

அதனைத் தொடர்ந்து, ‘த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தைப் பிற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை ஜீத்து ஜோசப் இயக்கி வரும் நிலையில், ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் கன்னட ரீமேக் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் கன்னட ரீமேக்கை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘சந்திரமுகி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய பி.வாசு இயக்குகிறார்.

‘த்ரிஷ்யம் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்ரவிச்சந்திரன், நவ்யா நாயர், பிரபு, ஆஷா சரத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஈ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ‘த்ரிஷ்யம்’ முதல் பாகத்தின் கன்னட ரீமேக்கை பி.வாசு இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

p vasu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe