/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_17.jpg)
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. இப்படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனையடுத்து, த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பானது பூஜையுடன் தொடங்கியது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த மாதம் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், படக்குழுவிடம் இருந்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரானது வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. இத்தகவலை த்ரிஷ்யம் படத்தின் ரசிகர்கள் இணையத்தில் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)