dream pictures released harkara

காளி வெங்கட், ராம்அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் பற்றி சொல்லும் படம் 'ஹர்காரா'. இப்படத்தில் கதாநாயகியாக கௌதமி, முக்கிய கதாபாத்திரங்களில் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தை இயக்கியும் உள்ளார். இவர் ‘வி 1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர். இப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக் கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன், அங்கு படும் அவஸ்தையையும்அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும்பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.