ADVERTISEMENT

"கனவு காணுங்கள், நம்புங்கள்" - சூர்யா ட்வீட்

11:22 AM Sep 06, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சூர்யா தனது 25வது ஆண்டு திரைப்பயணத்தை இன்று கொண்டாடுகிறார். இவர் அறிமுகமான 'நேருக்கு நேர்' படம் வெளியாகி இன்றுடன் 25-ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.


இந்நிலையில் சூர்யா தனது 25-ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "உண்மையிலேயே அழகான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள். கனவு காணுங்கள் நம்புங்கள்." என ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பதிவிட்டுள்ளார். இதனிடையே பாலா இயக்கும் 'வணங்கான்' படத்திலும் சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்திலும் தற்போது நடித்து வருகிறார் சூர்யா.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT