Skip to main content

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்! 

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

hshsdh

 

நடிகர் கிஷோர், சார்லி, நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும் திரைப்படம் "டிராமா". இந்திய சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் இதுவாகும். எட்டு மணி நேரத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து, அதன் பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படத்தின் இயக்குனர் அஜூ இதுகுறித்து பேசும்போது...

 

கிஷோர், சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே, இந்தப் படம் வெற்றிகரமாக வந்திருப்பதற்கு காரணம். நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே  ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல. அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத் தரும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சண்டக்காரங்க’ - திருநர் இட ஒதுக்கீட்டைப் பேசவிருக்கும் நாடகம்

Published on 16/11/2022 | Edited on 17/11/2022

 

Transgender people drama in chennai

 

திருநர் சமூகத்தினை இச்சமூகம் பார்க்கும் பார்வை முற்றிலும் முரணானது என்பதை எடுத்துரைக்கும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு “சண்டக்காரி” எனும் நாடகத்தை திருநர் கூட்டு இயக்கத்தினர் நடத்தினர். இந்தாண்டும் அதே போல “சண்டக்காரங்க” சுதந்திரப் போராளிகள் எனும் நாடகம் வரும் 23 ஆம் தேதி மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் நடைபெறுகிறது. 

 

திருநர் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி, உயிர் நீத்த திருநர்களை நினைவு கூறும் தினமாக அனுசரித்து வருகிறார்கள். இதையொட்டி சமூகத் தீண்டாமை மற்றும் குடும்பத் தீண்டாமையால் கொலை மற்றும் தற்கொலை செய்து இறந்த திருநர்களின் நினைவாக; நியாயம் கேட்கும் விதமாக பாலின சுதந்திரத்துக்கான ‘சண்டக்காரங்க’ எனும் நாடகத்தை திருநர்களே எழுதி, இயக்கி, நடிக்க உள்ளனர்.

 

yi

 

கடந்த ஆண்டு அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், திருநங்கைகள் ஒவ்வொருவரும் ஒரு பொறியாளராக, சித்த மருத்துவராக, காவல்துறை உதவி ஆய்வாளராக, சமூக சேவகராக தங்கள் நிலைகளை உயர்த்திக் கொண்டதோடு, தங்களைச் சார்ந்த ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கான தீர்வாகக் கல்வியையும் அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு எனும் ஆயுதத்தையும் ஏந்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் வருவதற்கான பாதை எப்படிப்பட்டது என்பதையும் இந்தச் சமூகத்தின் கோரமுகத்தையும் அவர்களின் உச்ச நடிப்பில் ஒருமித்த குரலோடு வெளிப்படுத்தியிருந்தனர். இந்தாண்டு அதே போல குடும்பத் தீண்டாமை, சமூகத் தீண்டாமை இவ்விரண்டாலும் கொலையும் தற்கொலைகளும் நிகழ்ந்த வண்ணம் இருப்பதால் அதைச் சார்ந்தே கதை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதை நேகா என்பவர் எழுத்தி இயக்கவுள்ளார். இதில், ஆடை வடிவமைப்பு ப்ராஸி செய்கிறார். 

 

Transgender people drama in chennai

 

இது குறித்து திருநங்கை கிரேஸ் பானுவிடம் பேசியபோது, “ஒவ்வொரு ஆண்டும் திருநர்களின் இறப்பு என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த இறப்புகளைத் தடுப்பதற்கான கதைக் களத்தில் இந்த நாடகத்தை நிகழ்த்த இருக்கிறோம். திருநர் சமூக மக்களுக்கு கல்விச்சூழல் எவ்வளவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்த உள்ளோம். திருநர் மக்களின் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. அதே போல அனைத்துத் துறையிலும் எதிர்காலத்தில் திருநர் மக்களின் பங்களிப்பை உறுதி செய்திட இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இறந்து போன திருநர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என உணர்த்தும் வகையில் இக்கதை அமைந்துள்ளது” என்றார். 

 

 

Next Story

கணவனைக் கொலை செய்து நாடகம்... ஆண் நண்பருடன் கைதான மனைவி... 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

 

விழுப்புரம் அருகே உள்ளது வி. அரியலூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (வயது 35). இவருக்கும் லாதா (வயது 28) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடந்துள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமானவுடன் இவர்கள் இருவரும் விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.
 

இந்தநிலையில் ராஜகுமாரன் விழுப்புரம் புதுச்சேரி வழித்தடத்தில் ஓடும் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார் அதோடு ஓய்வு நேரத்தில் விழுப்புரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுக்குத் தற்காலிக கார் ஓட்டுனர் பணிக்கும் சென்று வந்துள்ளார். இப்படி ஆவின் நிறுவனத்தில் பணி செய்து வரும்போது அங்கே ஏற்கனவே டிரைவராக வேலை பார்த்து வந்த வழுதரெட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவருக்கு அறிமுகமானார்.


 

bus driver

                                                ரஞ்சித்           ராஜகுமாரன்                 லதா 


இருவரும் அடிக்கடி சந்தித்து நெருங்கிய நண்பர்களாக பழகியதன் விளைவாக ரஞ்சித், ராஜகுமாரன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்தப் பழக்கம் ராஜகுமாரன் மனைவி லதா - ரஞ்சித் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம்  காலப்போக்கில் இருவருக்கும் இடையே தகாத உறவாக மாறியது. ராஜகுமாரன் டிரைவர் பணிக்குச் சென்ற பிறகு அடிக்கடி ராஜகுமாரன் வீட்டிற்கு ரஞ்சித் வந்து லதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தொடர்பு அந்த வீட்டின் உரிமையாளருக்கு தெரியவரவே அவர் ராஜகுமாரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜகுமாரன் மனைவி லதாவைக் கண்டித்ததோடு அங்கிருந்து தனது சொந்த ஊரான வி.அரியலூருக்கு அழைத்துவந்து குடித்தனம் நடத்தி வந்தார்.

 

தன்னிடம் இருந்து லதா பிரிந்து விடுவார் என்று பயத்திலும், குழந்தையின் எதிர்காலம் கருதியும் சொந்த ஊருக்கு மனையியை அழைத்து வந்துள்ளார் ராஜகுமாரன்.  அப்படியும் லதா - ரஞ்சித் இடையேயான உறவு நிற்கவில்லை. ராஜகுமாரன் இல்லாத சமயத்தில் ரஞ்சித் அடிக்கடி அரியலூருக்கே வந்து ராஜகுமாரன் வீட்டில் லதாவுடன் உல்லாசமாக இருந்து விட்டு சென்றுள்ளார். இது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தெரியவந்துள்ளது.
 

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரன் டிரைவர் பணிக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு மேல் விழுப்புரத்தில் ஹோட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் காலை லதா, தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் யாருக்கும்  சந்தேகம் வரவில்லை.  இதையடுத்து ராஜகுமாரன் உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். ராஜகுமாரன் மரணம் எப்படி நடந்தது என்று யாரும் யூகிக்க முடியாத நிலையில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.


 

 

இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். அப்போது இறந்து கிடந்த ராஜகுமாரன் அருகில் இரவு வாங்கிவந்த டிபன் பொட்டலம் பிரிக்கப்படாமல் அப்படியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லதாவை கணவர் இறந்தது சம்பந்தமாக எழுத்து மூலமாக புகார் அளிக்க சொல்லி அவரை தாலுகா காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
 

அங்கே அவரிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து ராஜகுமாரன் வீட்டுக்கு அருகில் இருந்தவர்களிடம் காவல்துறை விசாரணை செய்ததில் ஒரு இளைஞர் ராஜகுமாரன் வீட்டில் இல்லாத சமயத்தில் அடிக்கடி வந்து செல்வதாக கூறியுள்ளனர். லதாவின் முரண்பாடான பேச்சின் மூலம் பலத்த சந்தேகம் அடைந்த காவல்துறையினர், உரியமுறையில் லதாவிடம் விசாரணை செய்ததில் லதா ரஞ்சித்துடன் சேர்ந்து கணவர் ராஜகுமாரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
 

போலீசாரிடம் லதா அளித்த வாக்குமூலத்தில் சம்பவத்தன்று ராஜகுமாரன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஏற்கனவே வீட்டில் ரஞ்சித்தும் நானும் ஒன்றாக இருந்ததை பார்த்த ராஜகுமாரன் கோபம் அடைந்தார். எங்களுக்குள் காரசாரமான சண்டை நடந்தது. உடனே கதவை உட்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு நான் என் கணவர் ராஜகுமாரன் தலையில் சுத்தியால் அடித்தேன், ரஞ்சித் ராஜகுமாரன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி கொலை செய்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ராஜகுமாரனை கொலை செய்த பிறகு ரஞ்சித் எங்கள் வீட்டுக்குப் பின்பக்க வழியாக வெளியேறி விட்டார். காலையில் தூங்கி எழுந்ததும் எதுவும் நடக்காததைப்போல என் கணவர் இறந்து விட்டதாக கூறி கதறி அழுது அக்கம் பக்கத்தினரை வரவழைத்தேன் என லதா போலீஸாரிடம் எந்தவித தயக்கமும் பயமும் படபடப்பும் இன்றி தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார்


 

 

இதையடுத்து லதாவையும் அவரது  கள்ளக்காதலன் வழுதரெட்டி ரஞ்சித்தையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கு அனுப்பி உள்ளனர். ராஜகுமாரன் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
 

மேலும் இந்தக் கள்ளக்காதல் கொலையில் ரஞ்சித் - லதா ஆகிய இருவர் மட்டும் செய்தார்களா? அல்லது இவர்களுடன் சேர்ந்து வேறு யாரேனும் இந்தக் கொலையை செய்தார்களா? வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் செய்யப்படும் கொலைகள் வேதனை தருவதாக உள்ளது. கள்ளக்காதலர்கள் தங்கள் சுகத்தை மட்டுமே பெரிதாக எண்ணி கொலை செய்யத் துணிகிறார்கள். அவரவர்களுக்கு குழந்தைகள், உறவுகள் இருக்கின்றன. அவர்கள் நிலை என்னாகும் என்பதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள்.