DR56 movie teaser trending on social media

Advertisment

பிரவீன் ரெட்டி கதை, திரைக்கதைஎழுதி நடிக்கும் டிஆர்56 படத்தை இயக்குநர்ஆனந்தலீலாஇயக்கிறார். இப்படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்துள்ளார். பி.ஆர் ரெட்டி, ரமேஷ் பட், எத்திராஜ், கிரீஸ் ஜாதிக், தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு நோபின் பால் இசையமைத்துள்ளார். மெடிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரவீன் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று டிஆர்56 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் யூடியூப் தளத்தில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.