Advertisment

“அப்பா கரோனாவுடன் போராடுகிறார்” - நடிகரின் மகள் உருக்கம்!

rajasekhar

இந்தியா முழுவதும் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனாலும், பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போது பல தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

Advertisment

கரோனா பரவல் தீவிரமாக இருந்த சூழலில், பல முன்னணி பிரபலங்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒருசிலர் சிகிச்சைக்குப் பின் மீண்டு வீடு திரும்பினர், ஒருசிலர் சிகிச்சை பலனின்றி காலமாகினர்.

இந்நிலையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜசேகர் மற்றும்அவரது குடும்பத்தினருக்கு,கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராஜசேகருக்கு கரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதாக அவரது மகள் ஷிவாத்மிகா ராஜசேகர் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் ட்விட்டரில் பதிவிடுகையில், “கரோனாவுடனான அப்பாவின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எனினும், அவர் கடுமையாகப் போராடி வருகிறார். உங்களுடைய பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் எங்களை இதிலிருந்து காக்கும் என்று நான்நம்புகிறேன். அப்பா விரைவில் குணமடையவேண்டி பிரார்த்திக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது அன்பினால் அவர் மீண்டு வருவார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

corona
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe