double xl movie simbu make his debut in bollywood as singer

பாலிவுட்டில் ஹுமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் எக்ஸ்எல்' (Double XL). சத்ராம் ரமனி இயக்கியுள்ள இப்படத்தில் ஷிகர் தவான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார் உள்ளிட்ட 8 பேர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஜாகீர் இக்பால் மற்றும் தமிழ் நடிகர் மஹத் ராகவேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மஹத் ராகவேந்தர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் 'தாலி தாலி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு பாடியுள்ள இப்பாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் சிம்பு பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகிறார். மேலும், "இப்பாடலை தனது நண்பர் மஹத்திற்காக பாடியுள்ளதாகவும் அவரை நினைத்து பெருமை படுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த மஹத், "எனக்கு எப்போதும் முன்னோடியாக, வழிகாட்டியாக மற்றும் நல்ல நண்பராக இருந்துள்ளாய். என் இலக்கைஅடைய உதவியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும் இப்படத்தின் நாயகி ஹுமா குரேஷி சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கு நன்றி. அவரது குரலைக் கொடுத்ததற்காகவும், டபுள் எக்ஸ்எல் படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கும்" என குறிப்பிட்டுள்ளார். தமிழ் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பாடியுள்ள சிம்பு தற்போது இந்தியில் அறிமுகமாகியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.