சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! 

surya

நடிகர் சூர்யா இன்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் இதனைக் கொண்டாடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும், சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா பிரபலங்கள் அவருக்குத் தங்களின் வாழ்த்தைத் தெரிவிக்கின்றனர்.

'காப்பான்' படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் முதலில் கோடை விடுமுறையில் வெளியிடப்படுவதாக இருந்தது. அதனால்,டீஸர் மற்றும்இரண்டு பாடல்கள் ஏற்கனவே புரோமோஷனுக்காக தொடர்ந்து ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்பின் இந்தப் படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியிடாமல் இருந்த படக்குழு, சூர்யாவின் பிறந்தநாளான இன்று 'காட்டுப்பயலே' என்றொரு பாடலை வெளியிட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் மகளான தீ பாடியுள்ள இந்தப் பாடல் வெளியானதிலிருந்து பலரை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறார். மேலும், இதனுடன் ஒரு நிமிட வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளதால்ரசிகர்கள்அதை வாட்ஸப் ஸ்டேடஸ்களாக வைத்து வருகின்றனர்.

இத்துடன் சூர்யா ரசிகர்களுக்கு இன்றைய ட்ரீட் முடிந்துவிட்டது என்று பார்த்தால், தயாரிப்பாளர் எஸ்.தாணு சர்ப்ரைஸாக சூர்யாவின் கதாபாத்திர தோற்ற டிசைனை வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்னும் குறுநாவலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிப்பதாக முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திலும் ஜி.வி. பிரகாஷ்தான் இசையமைக்கிறார்.

actor surya
இதையும் படியுங்கள்
Subscribe