dop amit roy walked out shahrukh khan dunki movie

Advertisment

இயக்குநர்அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ஷாருக்கான் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன்ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டங்கி படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் அமித் ராய் விலகியுள்ளார். இது தொடர்பாக பேசிய அமித் ராய், “என்னால் இதற்கு மேலும் டங்கி படத்தில் பணிபுரிய முடியாது. 19, 20 நாட்கள் அந்தப் படத்தில் பணியாற்றினேன். இயக்குநர் ராஜு ஹிரானிக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் சுமூகமாக நான் இந்த படத்திலிருந்து விலகுகிறேன். இருப்பினும் இந்த படத்தில் நான் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும்” எனத்தெரிவித்துள்ளார்.