டிவி தொழில்நுட்பம் பிரபலமடைவதற்கு முன்பாக தூர்தர்ஷன் சேனல் ஒன்றுதான் இந்தியா முழுவதும் பொதுவான ஒரு சேனலாக இருந்து வந்தது. அந்தசமயத்தில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள், அதில் தொகுப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள் மக்களிடத்தில் பிரபலமாக திகழ்ந்தார்கள். குறிப்பாக 90ஸ் கிட்ஸிற்கு...
இந்நிலையில் தூர்தர்ஷனின் புகழ்பெற்ற இந்தி தொகுப்பாளினி மாளவிகா மராத்தே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மூளை புற்று நோயால் மரணமடைந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்த நோயினால் அவதிப்பட்டு வந்த மாளவிகா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
1991 முதல் 2001 வரை 12 வருடங்கள் புகழ்பெற்ற 'ஹலோ சகி' என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 53.