
தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கலைகள் அதிக அளவில் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் மக்களிசை கலைஞராக கிராமிய நாட்டுப்புற கரகாட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் அந்தோணிதாசன் - ரீத்தா தம்பதியினர்.
அந்தோணிதாசன் சின்ன சின்ன கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் தலைகாட்டி வந்தார்; பிறகு பல பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்; தற்போது அவர் FOLK MARLEY RECORDS என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிகழ்வில் பாடகிகள் சித்ரா, மாலதி, டைரக்டர் சீனு ராமசாமி, பாடகர்கள் கானா பாலா, வேல்முருகன், ஆந்தக்குடி இளையராஜா, பிரதீப், ரீத்தா அந்தோணி தாசன், நடிகர் தாஸ் மற்றும் திரை இசை ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய ரீத்தா அந்தோணிதாசன் “எங்களுக்கு சின்ன வயசிலேயே கல்யாணமாகிடுச்சு; இதை யாரிடமும் சொல்லிடாதிங்க” என்று ஊடகங்கள் சூழ்ந்திருக்க மேடையில் வெள்ளந்தியாக சொன்னார்; மேடையின் ஓரத்தில் நின்றிருந்த அந்தோணிதாசன் ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். இது மேடையில் கூடியிருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தது.