sivakarthikeyan

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு முழுவீச்சில் நடைபெற்றுவந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியது. இந்த நிலையில், ‘டான்’படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கிவிட்டு மீண்டும் படக்குழு கோயம்புத்தூர் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

Advertisment