Advertisment

'டான்' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!

don movie release postponed

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடிபடமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வரும் படக்குழு 'டான்' படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிக்கையில்," இயக்குநர்ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள'ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 25 ஆம்தேதி வெளியாவதை கருத்தில் கொண்டு டான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ss rajamouli RRR actor sivakarthikeyan Don
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe