don movie first song release date announced

Advertisment

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'டான்' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி டான் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனக் குறிப்பிட்டு அப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.