அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனத்துடன்இணைந்துஎஸ்.கே புரொடக்சன் தயாரிக்கிறது.
‘டான்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று தனது டப்பிங் பணியை முடித்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது அதன்படி 'டான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்நாளை மலை 5 மணிக்குவெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
#DONFirstLook ?@Siva_Kartikeyan@KalaiArasu_@SKProdOffl@Dir_Cibi@anirudhofficial@priyankaamohan@iam_SJSuryah@thondankani@sooriofficial@bhaskaran_dop@Inagseditor@Udaya_UAart@Bala_actor@RJVijayOfficial@sivaangi_k#Munishkanth@kaaliactor@anustylist@tuneyjohnpic.twitter.com/sJqJw50RTG
— Lyca Productions (@LycaProductions) November 9, 2021