மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு மற்றும் இடது தொழிற்சங்க மய்யம் ஒருங்கிணைக்கும் தூய்மை தேவதைகள் என்னும் ஆவண திரைப்படம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இந்த ஆவணப்பட நிகழ்வானது “தமிழகத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் தலைமையில், விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சமூக செயற்பாட்டாளர்கள் பாரதி, சுப.உதயகுமார், சந்திர மோகன், பாலைவன லாந்தர் , பன்னீர், பெலிக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு திரையிடலை சிறப்பித்தனர். தூய்மை பணியாளர்களை முன்னிறுத்திய இந்த ஆவணப்படமானது பல்வேறு இடங்களில் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.