பண்டிகை தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டாக்டர்’!

Sivakarthikeyan

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘டாக்டர்’ திரைப்படம், கடந்த 9ஆம் தேதி வெளியானது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வசூல் ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் ‘டாக்டர்’ திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், வரும் தீபாவளி தினத்தன்று ‘டாக்டர்’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதற்கு மறுதினமான நவம்பர் 5ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ‘டாக்டர்’ திரைப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe