Sivakarthikeyan

Advertisment

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, டாக்டர் திரைப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகும் எனக் கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ்தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தற்போது கிடைத்திருக்கும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், மக்களிடையே தேர்தல் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், படத்தை வெளியிட்டால் பட வசூலில் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் எனத் தயாரிப்பு தரப்பு யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு டாக்டர் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.