Sivakarthikeyan

Advertisment

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பை திரையரங்கில் காணும் ஆவலோடுஇருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், டாக்டர் படத்தின் ரீலிஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரம்ஜான் தினத்தன்று டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment