Doctor informed about Lata Mangeshkar's health!

Advertisment

பழம்பெரும் பின்னணிப் பாடகிலதா மங்கேஷ்கருக்கு (92) லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஏற்பட்டதால், தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அம்மருத்துவமனையின் இணை பேராசிரியர் டாக்டர் பிரதீத் சம்தானி நேற்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்துகூறும்போது, “பாடகி லதா மங்கேஷ்கருக்கு கவனிப்பு தேவை, அதனால் அவர் இன்னும் சில நாட்கள் ஐசியுவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். அவர் உடல்நிலை முன்பு போலவே உள்ளது; அவரை சந்திக்க இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை” என்றார்.