"என் வேலையை முடிச்சிட்டேன்" - அப்டேட் செய்த சிவகார்த்திகேயன்!

gfdsgds

'கோலமாவு கோகிலா' புகழ் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கில் வெற்றிபெற்ற ‘கேங்ஸ்டர்’ பட நாயகி பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

dfxbxdf

யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகளைத் தான் முடித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Subscribe