do it for the sake of the journalism school you never graduated from - actress Shraddha Srinath

Advertisment

தமிழில் 'இவன் தந்திரன்', 'விக்ரம் வேதா' 'நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். 'சக்ரா' படத்தை தொடர்ந்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த 'விட்னஸ்' படத்தில் அனுபவ நடிகை ரோகினியுடன் இணைந்து நடிக்கிறார். இதனிடையே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ச்சியாக தன் படங்களின் அப்டேட்டுகளை பகிர்வது வழக்கமாக வைத்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது ஒரு ட்விட்டர் கணக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் புகைப்படத்தை பகிர்ந்து 'ஷ்ரத்தா தாஸ்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது பக்கத்தில் பகிர்ந்து, "8 லட்சத்தி அறுபத்தி ஓராயிரம் (861k) பேர் பின்தொடரும் இந்த கணக்கை யார் கையாள்கிறார். பெரிய திரைப்படக் கணக்குகளைக் கையாளும் பயிற்சியாளர்களிடம் எனக்கு ஒரு கேள்வி. தயவு செய்து, நீங்கள் பட்டம் பெறாத ஜர்னலிசம் பள்ளிகளுக்காகவாது இதைச் செய்யுங்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்று கூப்பிடுங்கள். தாஸ் அல்லது கபூர் என்றோ அல்ல.

இன்ஸ்டாகிராமில் எனது பெயரை ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத் என்று மாற்றிக்கொண்டேன். இங்கேயும் அதை மாற்ற வேண்டும் போல. ராமா ​​என்பது என் அம்மாவின் பெயர். இனி எல்லா இடங்களிலும் ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத் என்று என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்வேன். என் பெயரைச் சரியாகச் சொன்னவர்களை நான் பாராட்டுகிறேன். உங்கள் கீ போர்டு, தாஸ் அல்லது கபூரைப் பரிந்துரைத்தாலும், உங்கள் உடல் ஸ்ரீநாத் என்று தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்று சொல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment