தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளசினிமாக்களில்நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில்ராணாவுடன்இணைந்து விரத பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவிநக்சலைட்டாகநடித்துள்ள இப்படம் நேற்று (17.8.2022) வெளியாகி நல்லவரவேற்பைப்பெற்று வருகிறது.
இப்படத்தின்ரிலீஸுக்குமுன்பு சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர்ஃபைல்ஸ்திரைப்படத்தில் காஷ்மீர்பண்டிட்டுகள்கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர்பண்டிட்டுகள்கொல்லப்படுவதும்,கரோனாகாலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களைஜெய்ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று கூறியுள்ளார். இவரின் இந்தகருத்துக்குப்பலரும் ஆதரவு தெரிவித்தாலும்இந்து அமைப்பினர் மற்றும் நடிகை விஜய் சாந்தி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுகஎம்.எல்.ஏடி.ஆர்.பி ராஜா நடிகை சாய் பல்லவியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ளட்விட்டர்பதிவில், "சிலர் சாய்பல்லவியைக்கண்டித்துப்பதிவிடுவதைப்பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவர்களின்இந்ததாக்குதலில் இருந்துஜனநாயகம்தப்பிப்பிழைக்க வேண்டும். நமது இளைஞர்கள் இது போன்ற விஷயங்களுக்கு அடிமையாகாமல் மனதில்பட்டதைத்தைரியமாகப்பேச வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.