Advertisment

ஆஸ்கருக்கு முயற்சிக்கும் சூர்யா மகள்

135

சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் தியா கடந்த மே மாதம் தனது பள்ளிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கியிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு டாக்குமெண்ட்ரி டிராமா குறும்படத்தை இயக்கியிருந்தார்.

Advertisment

‘லீடிங் லைட்’ என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் உருவாகியிருந்தது. இப்படம் பாலிவுட் துறையில் காஃபர்-ஆக(Gaffer)என அழைக்கப்படும் மூன்று லைட்வுமன்களின் வாழ்க்கையை மற்றும் அவர்களது பணியில் இருக்கும் சிரமத்தை பேசுகிறது. இந்த படதிற்காக இரண்டு விருதுகளை தியா சூர்யா வாங்கியிருக்கிறர். இதனை கடந்த ஆண்டு ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார். மேலும் படத்தின் யூட்யூப் லிங்கையும் பகிர்ந்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் ‘லீடிங் லைட்’ குறும்படம் ஆஸ்கர் தகுதி போட்டிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (26.09.2025) முதல் அக்டோபர் 2 வரை திரையிடப்படுகிறது. இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் சார்பில், சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

daughter oscar awards jyothika actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe