மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நாயகியாகவும் ஒரு ரவுண்டு வந்தார். மலையாளத்திலிருந்து வந்து தமிழில் கலக்கிய நடிகைகளில் முக்கியமானவர் திவ்யாஉன்னி.
கேரளாவில் இவர் சொந்தமாக யானை வளர்த்து வந்தார். நடிகைகளில் யானை வளர்ப்பது அப்போது எல்லோராலும் ஆச்சரியமாக பேசப்பட்டது.
சபாஷ், வேதம், பாளையத்து அம்மன் என்று தமிழில் தொடர்ந்து நடித்து வந்தவர் கடந்த 2002ம் ஆண்டு சுதிர்சேகரை திருமணம் செய்துகொண்டார். அர்ஜூன், மீனாட்சி என்ற இரு குழந்தைகள் பிறந்தது. சுதிர்சேகருடனான கருத்து வேறுபாட்டினால் 2016ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்துவிட்டு, அருண்குமாரை கரம்பிடித்து அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக உள்ள புகைப்படங்களையும், வளைகாப்பு நடந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.