Advertisment

உயிரிழந்த இளம் நடிகையின் உருக்கமான கடைசிப் பதிவு!

divya

Advertisment

பாலிவுட்டின் பிரபல டி.வி. சீரியல் நடிகையான திவ்யா சௌக்ஸி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். இச்செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லண்டனில் நடிப்பு கலையைப்பயின்றவரான திவ்யா, ‘ஹை அப்னா தில் தோ அவாரா’ என்கிற ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். இவர் நேற்று மறைந்துவிட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவியது. இவருக்கு வயது 29.

பின்னர் அவருடைய உறவினர் அமிஷ் வர்மா இந்தச் செய்தியைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். மேலும் திவ்யா காலமாகும் முன்னர், தனது ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் பதிவை விட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்தஅவரது பதிவில், ''நான் சொல்ல நினைப்பதற்கு, வார்த்தைகள் போதாது. பல மாதங்களாக எனக்குத் தொடர்ந்து ஆறுதல் மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது நான் இதைச் சொல்ல வேண்டிய நேரம். நான் என் மரணப் படுக்கையில் இருக்கிறேன். நான் வலிமையாகதான் இருக்கிறேன். இந்தக் கஷ்டங்கள் இல்லாமல் இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும். Bye'' என எமோஷனலாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்தத் திடீர் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe