Skip to main content

சூர்யாவுக்கு வைர மோதிரம் பரிசளிப்பு

Published on 10/05/2025 | Edited on 10/05/2025
distributer sakthi velan gifted diamond ring to suriya regards retro success

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் இதுவரை ரூ.104 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. இந்த லாபத்தில் சூர்யா தனது அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளார். இதனிடையே படக்குழு படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.  

இந்த நிலையில் படக்குழு நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தியுள்ளது. இதில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது தொழில் நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வைர மோதிரங்கள் வழங்கப்பட்டது. மேலும் சூர்யாவிற்கு படத்தின் தமிழக வெளியீட்டு விநியோகஸ்தர் சக்தி வேலன் வைர மோதிரம் பரிசளித்தார். ஆனால் சூர்யா திருப்பி அந்த மோதிரத்தை சக்தி வேலனுக்கே கொடுத்து விட்டார். இதற்கு முன்னதாக இதே போன்று ‘கடைகுட்டி சிங்கம்’ மற்றும் ‘விருமன்’ பட வெற்றி விழாவில் சக்தி வேலன் அளித்த பரிசை சூர்யா மீண்டும் அவருக்கு அன்பளிப்பாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்