Skip to main content

ஏமாற்றிய ஐ.பி.எல்... இந்தியாவில் கோலோச்சுமா ‘டிஸ்னி ப்ளஸ்’ ? 

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

இந்தியாவின் மிகப்பெரிய ஓ.டி.டி. பிளாட்ஃபார்மாக இருப்பது ஹாட்ஸ்டார். இந்த செயலியை கடந்த வருடம், டிஸ்னி நிறுவனம், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை வாங்கும்போது அதனுடன் இதையும் தக்க வைத்துக்கொண்டது. 
 

disney plus


இந்நிலையில் பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் டிஸ்னி நிறுவனம் படங்கள் தயாரிப்பது, தீம் பார்க் என்று அனைத்து துறைகளில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில், கடந்த வருடம் டிஸ்னி ப்ளஸ் என்ற ஓ.டி.டி. நிறுவனத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அந்தத் துறையின் தற்போதைய ஜாம்பவான்களான நெட்பிளிக்ஸ், அமேசான் நிறுவனங்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.டி.டி. சந்தையில் மிகப்பெரிய லாபம் தரும் சந்தையாக இந்தியா உருவாக உள்ளது. இந்நிலையில் அமேசானும், நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் தங்களுக்கான இடங்களை இந்தியாவில் பிடித்துவிட்டது. கடந்த வருடம்தான் அறிமுகமானாலும் டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் அமெரிக்காவின் அதிக ஓ.டி.டி. வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக திகழ்கிறது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஓ.டி.டி. நிறுவனமாக இருக்கும் ஹாட்ஸ்டாருடன் இணைந்து டிஸ்னி ப்ளஸ் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. டிஸ்னி ப்ளஸ்ஸில் டிஸ்னி, மார்வெல், பிக்ஸார், ஸ்டார் வார்ஸ் மற்றும் நேஷனல் ஜாகரஃபி உள்ளிட்டவை தயாரித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பலரால் பேசப்படும் எட்டு மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் நிகழ்ச்சிகள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

டிஸ்னி ப்ளஸ் மார்ச் 29ஆம் தேதி ஐ.பி.எல். போட்டிகளைக் குறிவைத்து இந்தியாவில் அறிமுகமாகுவதாக இருந்தது. ஆனால், கரோனாவால் இந்த போட்டிகள் இந்தியாவில் தள்ளிப்போயிருப்பது டிஸ்னி நிறுவனத்திற்கு ஏமாற்றம்தான். இதை வைத்துதான் இலவசமாக பயன்படுத்தும் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ப்ரிமியம் வாடிக்கையாளர்களாக மாற்ற திட்டம் தீட்டியிருந்தது டிஸ்னி. இருந்தாலும் பரவாயில்லை என்று திடீரென ஏப்ரல் 3ஆம் தேதி களத்தில் இறங்குவதாக நேற்று அறிவித்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் இதுவரை எந்தவித புது ஆஃபர்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மார்வெல் நிறுவனத்துடன் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Junior NTR meeting with Marvel studios

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

 

இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது, 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டது. முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பேட்டியில் "மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது" எனக் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர், அமெரிக்காவில் உள்ள மார்வெல் ஸ்டுடியோவின் நிர்வாகி விக்டோரியா அலோன்சோவை சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் சில நிமிடங்களே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஏதேனும் வாய்ப்பு அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.  

 

 

Next Story

குழந்தைகளின் ஃபேவரெட் படத்திற்கு 14 நாடுகளில் தடை

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Children's favorite film banned in 14 countries

 

ஹாலிவுட் திரையுலகில், அனிமேஷன் படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் குழந்தைகள் மத்தியில் மவுசு அதிகம். அந்த வகையில் 1995-ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'டாய் ஸ்டோரி' அனிமேஷன் படம் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து 'டாய் ஸ்டோரி' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. கடைசியாக இப்படத்தின் நான்காம் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. 

 

இதனிடையே 'டாய் ஸ்டோரி' படத்தில் இடம்பெற்ற 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 'பஸ் லைட்இயர்' கதாபாத்திரத்தை வைத்து உருவாகியுள்ள 'லைட் இயர்' படம் நேற்று (17.06.2022) வெளியானது. இப்படத்தை அங்கஸ் மேக்லேன் இயக்கியுள்ளார்.   

 

இந்நிலையில் 'லைட் இயர்' படத்திற்கு துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என கூறியும் 'லைட் இயர்' படத்திற்கு தடை விதித்துள்ளது.