/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/422_10.jpg)
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய திரைப்படங்களை பார்க்க முடியும். இந்த நான்கு படங்களின் தொகுப்பு, டிசம்பர் 30 அன்று பார்க்கிங் திரைப்படம் மற்றும் ஜனவரி 15 இல் ஜோ திரைப்படத்துடன் துவங்கியது. இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்இயக்கத்தில் உருவான 'பார்க்கிங்' படத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜோ படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர் நடித்திருக்க ஹரிஹரன் ராம் இயக்கியிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஜனவரி 27 முதல் ஃபைட் கிளப் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. அப்பாஸ் A ரஹ்மத் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் குமார், மோனிஷா மோகன் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த புதிய திட்டத்தின் இறுதிப் படமாக - சபா நாயகன் படத்தினை பிப்ரவரி 14 அன்று ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை சி எஸ் கார்த்திகேயன் இயக்கியிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)