ஜேம்ஸ் கேமரூனின் கனவு படமான அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தை தொடர்ந்து அவதார் படத்தை பல வருட தயாரிப்புக்கு பின் எடுத்தார் ஜேம்ஸ். இத்தனை வருட காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை. சுமார் 2.7 பில்லியன் டாலர் சம்பாதித்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் அவதார் படத்தில் மேலும் நான்கு பாகங்களை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக 2010ஆம் ஆண்டு அறிவிப்பு செய்தது. இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகமும் 2014, 2015ஆம் ஆண்டு வெளியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப வசதிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதால் இன்னும் தாமதமாகும் என்று அறிவித்தார்கள்.
இதனையடுத்து 2016ஆம் ஆண்டில் 2018, 2020, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. பின்னர், ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் கேமரூன் 2018ஆம் ஆண்டும் அவதாரை வெகியிட சாத்தியமற்றது என்று தெரிவித்தார். அதன்பின்னர் இப்படத்தை தயாரித்து வந்த ஃபாக்ஸ் நிறுவனம், அவதார்2 முதல் 5 வரையிலான ரிலீஸ் தேதிகளை போஸ்டர் வடிவில் வெளியிட்டது. அவதார் 2 டிசம். 18, 2020; 3ஆம் பாகம் டிசம். 17, 2021; 4ஆம் பாகம் டிசம். 20, 2024; 5ஆம் பாகம் டிசம். 19, 2025 என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
நியூசிலாந்தில் உருவாகிவரும் இப்படத்தின் ரிலீஸ் தேதிகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அவதார்2 ஒருவருடம் தள்ளிப்போய் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
2020ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அவதார் 2 தற்போது ஒருவருடம் தள்ளிப்போகிறது. 2021 டிசம்பர் 17ம் தேதி இரண்டாம் பாகம் வெளிவரும். ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி வாங்கியதால் தற்போது டிஸ்னி தயாரிப்பில் உருவாகி வரும் மற்றுமொரு மிகப்பரிய பொருட்செலவில் உருவான ஸ்டார் வார்ஸ் ரிலீஸை முன்னிட்டு அவதார் 2ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவதார் பாகங்களில் ரிலீஸ் தேதி...
அவதார் 2 - 17 டிசம்பர் 2021
அவதார் 3 - 22 டிசம்பர் 2023
அவதார் 4 - 19 டிசம்பர் 2025
அவதார் 5 - 18 டிசம்பர் 2027