Advertisment

கங்கை நதிக் கரையில் பூஜை - சர்ச்சையில் சூர்யா பட நடிகை

Disha Patani in Varanasi video goes viral

இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் திஷா பதானிதற்போது யோதா, ப்ராஜெக்ட் கே, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். யோதா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்துள்ளார். ப்ராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்களுடன் நடிக்கிறார். கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் திஷா பதானி.

Advertisment

இந்த நிலையில் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு சென்றுள்ளார் திஷா பதானி. அங்கு கங்கை நதியில் தனது உறவினர்களுடன் கங்கா ஆரத்தி எடுத்து பூஜை செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த வீடியோ வைரலாகப் பரவ, சிலர் திஷா பதானி அணிந்திருக்கும் உடை குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

அதில் அவர் கருப்பு டாப் மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். புனிதனமான கங்கை நதிக் கரையில் திஷா பதானி ஆபாசமாக உடை அணிந்து வந்ததாக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுசமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Varanasi Actress actor suriya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe