/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/154_25.jpg)
இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் திஷா பதானி தற்போது யோதா, ப்ராஜெக்ட் கே, கங்குவா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். யோதா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்துள்ளார். ப்ராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்களுடன் நடிக்கிறார். கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் திஷா பதானி.
இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி வெளியூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது உள்ளே நுழைவதற்கு முன்பு அவரை பரிசோதிப்பதற்காக அங்கிருந்து காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். பின்பு அவருடைய பயணச்சீட்டை கேட்ட காவலர் அவரது அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். அதை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியடைந்து தனது பேக்கில் இருந்து தேடி, பின்பு அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)