Advertisment

சூர்யாவுடன் ஜோடிசேரும் பிரபல பாலிவுட் நடிகை

disha patani female lead role surya 42

Advertisment

சூர்யா, பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். பாலா படத்தின் பணிகளை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்தின் பணியில் ஈடுபடவுள்ளார்.

இதனிடையே நடிகர் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் வேல் ராஜா தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இப்படம்பீரியட் கலந்த ஆக்சன் கதையாகஇருக்கும் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வார தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்தற்போது பிரபல பாலிவுட் நடிகையை படக்குழு தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானிசூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தஅறிவிப்பு வெளியாகும் எனக்கூறப்படுகிறது.

Bollywood siruthai siva actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe