Skip to main content

அஜித்தை இயக்க வரிசையில் நிற்கும் இயக்குனர்கள்...பட்டியல் உள்ளே!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019
ajith

 

 

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள படத்தை யார் யாரெல்லாம் இயக்க வாய்ப்புள்ளதாக தற்போது ஒரு தகவல் கசிந்து வருகிறது. அதன்படி, புஷ்கர் காயத்ரி, சிறுத்தை சிவா, ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அஜித் இதில் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Bharathiraja and Ilayaraja meet

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஏகே 61' படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

ajay joins ajith ak61 film

 

வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது. 

 

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார், அங்கு பைக் ரேசர் குழுவுடன் சேர்ந்து பைக்கில் லண்டனைச் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. 

 

இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஏகே 61 படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது குடும்பத்துடன் லண்டனில் இருப்பதால் படக்குழு படத்தின் பிற காட்சிகளை படமாக்கி வருகிறது. அஜித் இந்தியா திரும்பியவுடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

 

Next Story

'வலிமை'க்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

madras high court new order valimai story theft case

 

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்திருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே வலிமை படம் 'மெட்ரோ' படத்தின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

 

இதனை தொடர்ந்து 'வலிமை' படத்தில் தனது கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக 'மெட்ரோ' படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் இப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற, 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச் வினோத் இருவரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், "செய்தித்தாள்களில் வந்த அன்றாட செய்திகளின் அடிப்படையில்தான் 'வலிமை' படம் எடுக்கப்பட்டது என்றும், 'மெட்ரோ' படத்தின் கதையை வைத்து படம் எடுக்கவில்லை என்றும் இயக்குநர் எச் வினோத் பதிலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 'வலிமை' படத்தை ஓடிடியில்  வெளியிட தடையில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.