Advertisment

"இளைப்பாற நிலைத்த அன்பில் பருகும் தேநீர் போதுமானது" - வைரலாகும் இயக்குநர்கள் சந்திப்பு !

directors Mari Selvaraj family and Ranjith family met

சமூக கருத்துக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையும் திரைப்படத்தின் மூலம் வெளி கொண்டு வரும் இயக்குநர்களில் பா.ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் முக்கியமானவர்கள். இயக்குநர் பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் 'சியான் 61' படத்தை இயக்கவுள்ளார். இதே போல் இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித் குடும்பமும், மாரி செல்வராஜ் குடும்பமும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ்,"உன்னதமான இளைப்பாறுதலுக்கு நிலைத்த அன்பில் பருகும் தேநீர் போதுமானது" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Pa Ranjith mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe