தமிழ் சினிமாவின் முன்ணனி நட்சத்திரமானநடிகர்சூர்யாவை, தனதுநேருக்கு நேர் படத்தின்மூலம் அறிமுகப்படுத்தியவர், இயக்குனர்வசந்த்.
தற்போது, சூரரைபோற்று படம் வெளியாகி, சூர்யாவின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் வசந்த்சூர்யாவிற்கு கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார். அதில், இதுவரை சூர்யா நடித்ததில், உச்சபட்சமான நடிப்பு இதுவென்றும், சூர்யாவின் இந்த வெற்றியை,பெருமிதத்தோடுஉச்சி முகர்ந்து மகிழ்வதாகவும், அவர் பாராட்டியுள்ளார்.
சூர்யாவிற்கு, இயக்குனர் வசந்த்எழுதியகடிதம் வருமாறு:-
"அன்புள்ள சூர்யாவுக்கு, இந்த பாராட்டு கடிதம் உனக்கு இல்லை... நெடுமாறன் இராஜாங்கத்திற்கு, முதல் ப்ரேமில்இருந்து ரோலிங் டைட்டில்ஒடுகிற கடைசிப்ரேம்வரை உன் ஆட்சிதான்.. பிரேம்க்குப்ரேம், சீனுக்குசீன்உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த்திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த, உன் அறிமுகத்திற்கு பிறகுகொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று, கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது இதுதான் உன் உச்சம்! இப்போதைக்கு!!!நெடுமாறன் ராஜாங்கமாகநீ நடிக்கவேஇல்லை. இரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய். முதல் காட்சியின்ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி, உன் கண்களில்இறுதிவரை தெரிக்கிறது கனல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும் போது, ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது, உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக,அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்க்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய். உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன். ஹேட்ஸ்ஆப்டூ மை டியர்சூர்யா...என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்து விட முடியும் ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ, எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சி முகந்து உச்சி முகந்து மகிழ்கிறேன்"இவ்வாறு அந்த கடிதத்தில், இயக்குனர் வசந்த், சூர்யாவை பாராட்டியுள்ளார்.