‘மாஸ்டர்’ படத்தின்வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில்,அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குநர்கள்அட்லீ, நெல்சன் திலீப்குமாருடன்இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அந்த புகைப்படத்தை நடிகர்விஜய் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது இயக்குநர்களுக்காகநடிகர் விஜய் எடுத்த அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்திலும்நடித்துள்ள நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார்இயக்கத்தில் வெளியாக உள்ள'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.