Advertisment

2021ல் சூர்யாவுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்!

athreya

Advertisment

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியாகி அனைவரையும் திகிலடையை செய்த படம் ‘யாவரும் நலம்’. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரம் குமார். இவர் முதன் முதலில் சிம்புவை வைத்து ‘அலை’ என்றபடத்தை இயக்கினார்.

இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் அங்கு ராமாராவ், நாகா அர்ஜுன், நாக சைத்தன்யா உள்ளிட்டவர்களை வைத்து இயக்கிய ‘மனம்’ படம் க்ளாஸிக் ஹிட்.

சூர்யாவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ‘24’ என்றடைம் ட்ராவல் படத்தை இயக்கினார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், இயக்குனர் விக்ரம் குமார், சமீபத்திய பேட்டியில் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். சூர்யாவுக்கு, தான் சொன்ன கதை பிடித்திருந்ததாகவும், 2021-ல் இருவரும் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

சூர்யாவின்‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ‘அருவா’ படத்தில் நடிக்க உள்ள சூர்யா, இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

actor surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe